சுவாமிகளது ஞானஒளி ஈழவள நாட்டில் பரவத்தொடங்கிய காலம் முதலாக பலர் அவர் சுரந்த ஞானபானம் பருகுதற்கு அவரது அணுக்கத்தொண்டராயினர். காலதேச ஞானங்கடந்த இவ்வருட்குரவனிடம் இன, மத, மொழி, தேச பேதமின்றி பலபடித்தரத்தினரும் கூடலாயினர். இன்னும் சில குடும்பங்கள் சுவாமிகளையே தமது குலகுருவெனவே போற்றி வணங்கினர். எனினும் மற்றுப் பற்றெதுவும் இன்றி உலகபோகங்களைத் துறந்து சுவாமிகள் காட்டிய வழியில் நேர்நேராய்ச் சென்று துறுவு பூண்டவர்கள் மார்க்கண்டு சுவாமி, செல்லத்துரை சுவாமி, சந்தசுவாமி என்னும் இம்மூவரே.
மார்க்கண்டு சுவாமிகள்
செல்லத்துரை சுவாமிகள்
சந்தசுவாமிகள்