சிவதொண்டன் நிலையம் இரு அங்கங்களைக் கொண்டது. திருவடி வீற்றிருக்கும் தியான மண்டபமும் சுவாமிகளது திருவுருவம் பிரதிட்டை செய்யபெற்றிருக்கும் புராண மண்டபமுமே அவ்விரு அங்கங்களுமாகும். (இத்துடன் சாதகர்கள் தங்குவதற்கான தங்குமிட விடுதியும் இணைந்திருக்கும்)
மேல்மாடியிலிருக்கும் தியானமண்டபத்தில் மௌனமான பூசையும் தியானமும் மாத்திரம் இடம்பெறும். புராணமண்டபத்தில் தேர்ந்தெடுத்த சில திருநூற் படிப்பும் எளிமையான பூசனையும் மட்டுப்படுத்தப்பட்ட விழாக்களும் நிகழும்.